அரசு பேருந்து விபத்து, பொதுமக்கள் சாலை மறியல்

அரசு பேருந்து ஓட்டுநர் வலதுபுறமாக பேருந்தை இயக்கியதால் எதிரே இருசக்கர வாகனம் மீது மோதியது இருசக்கர வாகனத்தில் வந்த பாட்டி பேரன் இருவரும் பேருந்தின் தகடு கிழித்து படுகாயம் அடைந்தனர்.இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-02-05 08:32 GMT
மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதல் பேரன் பாட்டி படுகாயம் கிராம மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்திலிருந்து வந்த அரசு பேருந்து மருவலம் கிராமத்தில், ஓட்டுநர் வலதுபுறமாக பேருந்தை இயக்கியதால் எதிரே இருசக்கர வாகனம் மீது மோதியது இருசக்கர வாகனத்தில் வந்த பாட்டி ராஜேஸ்வரி (55) பேரன் சச்சின் (18)இருவரும் பேருந்தின் தகடு கிழித்து படுகாயம் அடைந்தனர். உடனே பேருந்து ஓட்டுநர் பயந்து பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரசு பேருந்து கழக மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்துகாயமடைந்தவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிப்பதாகவும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News