மினி பேருந்து மீது மோதிய அரசு பஸ் - பயணிகள் காயம்
சீர்காழி அருகே மினி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 7 பயணிகள் காயமடைந்தனர்.;
Update: 2024-03-27 04:40 GMT
அரசு பேருந்து
சீர்காழி அருகே அட்டகுளம் பேருந்து நிறுத்தத்தில் மினி பேருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டு கொண்டிருந்தது. அப்பொழுது மினி பேருந்துக்கு பின் புறத்தில் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி நோக்கி வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்து மற்றும் மினி பேருந்தில் பயணம் செய்த ஏழு பேர் படுகாயமடைந்தனர். சீர்காழி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மகேஸ்வரி, ராஜலட்சுமி, பிரசாந்த், செந்தமிழ்ச்செல்வி, லலிதா மற்றும் மாலதி உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.