முன்னதாகவே புறப்படும் அரசு பேருந்து - மாணவர்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஓலைப்பட்டி, வீரியம் பட்டி பிரிவு சாலை, சிப்காட், சூளகரை, பாராண்ட பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் ஊத்தங்கரையிலிருந்து வரும் U4 என்ற டவுன் பஸ்ஸில் பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவர்கள் இலவச பயண அட்டையை கொண்டு பேருந்தில் பயணம் செய்வதாகவும் இதனால் டிப்போவிற்கு உரிய வருமானம் காட்ட முடியவில்லை என்றும் அந்த பேருந்து இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கூறுகின்றனர்,
இந்த நிலையில் தினம் தோறும் பேருந்து 7.20 ஊத்ங்கரையிலிருந்து புறப்பட்டு 8:50க்கு போச்சம்பள்ளி பேருந்து நிலையம் வந்து அடையும் நிலையில் தற்பொழுது முன்கூட்டியே 8:20 மணி அளவில் போச்சம்பள்ளிக்கு வந்து விடுகின்றது. இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்யும் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் விவசாயிகள் முதியவர்கள் பாதிக் கபடுகின்றனர். இதனால் அவ்வழியாக வரும் டெம்போக்கள் இருசக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு வருகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களில் மாணவர்கள் வரும்போது கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது.
இதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மாணவருக்கு இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த மாணவன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து மாணவர்கள் டிப்போ மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள டைமிங் சென்டரிலும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஊத்தங்கரை டிப்போ மேனேஜர் மயில்வாகனம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இந்த பேருந்து ஊத்தங்கரையிலிருந்து 7:20 மணிக்கு எடுக்கப்பட்டு போச்சம்பள்ளிக்கு 8:50 முதல் 8:40 மணியளவில் வந்து சேரும் ஆனால் பேருந்து முன்னதாக எடுத்து செல்வது தெரியவில்லை இதுகுறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை எச்சரிக்கை செய்கிறேன் இது குறித்து செய்தி வெளியிட வேண்டாம் இந்த ஒரு முறை மன்னிப்பு கொடுங்கள் என்று தகவல் தெரிவித்தார்.