ஆலங்குளத்தில் அரசு ஊழியரின் பைக் எரிப்பு: ஒருவர் கைது
ஆலங்குளத்தில் இருசக்கர வாகனத்தை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 13:11 GMT
எரிக்கப்பட்ட பைக்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ் நகரைச் சோ்ந்த கணபதி மகன் கங்காதரன்(55). வட்டார சுகாதார மேற்பாா்வையாளராக உள்ளாா். இவா், பேருந்து நிலையம் அருகேயுள்ள சுகாதார அலுவலகத்தில் புதன்கிழமை தனது பைக்கை நிறுத்தி விட்டு, தென்காசிக்குச் சென்றிருந்தாராம்.
அந்த பைக்கை இரவில் மா்மநபா் பெட்ரோல் ஊற்றி தீ எரித்துவிட்டு தப்பினாராம். ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும் பைக் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
அதில், ஆலங்குளம் அண்ணாநகரைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகன் முத்துக்குட்டி (43) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.