முழு உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
நாகை நம்பியா நகரில் மூளை சாவு அடைந்தவரின் முழு உடல் உறுப்பு தானம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உறுப்புதானம் என்பது ஒரு உன்னதமான செயலாகும். இதில் இறந்த நபர் தனது உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பலருக்கு இரண்டாவது வாழ்க்கையை அளிக்கிறார். இவ்வாறு தனது உறுப்புகளை தானம் செய்யும் நபரின் தியாகத்தினை போற்றும் வகையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அரசாணை எண்.331 நாள்.07.10.2023-இன் படி தமிழ்நாடு み சார்பில் அவரி ன் உடலுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
அந்த வகையில் நாகப்பட்டினம் வட்டம், நம்பியார் நகர், நடுத் தெரு, எண்.177 என்ற முகவரியைச் சேர்ந்த திரு.எஸ்.பழனிவேல் என்பவரின் முழு உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு சார்பில் அவரின் உன்னதமான நற்செயலினை போற்றும் வகையில், 18.03.2024 அன்று நடைபெற்ற அவரின் இறுதி ஊர்வலத்தின் போது, நாகப்பட்டினம், மாவட்ட ஆட்சித்தலைவர் தி ஜானி டாம் வர்கீஸ், உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்.