அரசு நூலகத்தை திடீர் ஆய்வு செய்த அமைச்சர்
குமாரபாளையம் அரசு நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-21 14:36 GMT
ஆய்வு செய்த அமைச்சர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே அரசு நூலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 02:00மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நூலக செயல்பாடுகள், நூலகத்திற்கு வரும் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்த அமைச்சர், நூலகத்திற்கு தேவையான உதவிகளையும் கேட்டறிந்தார். பகுதி நேர நூலகமாக இருப்பதை, முழு நேர நூலகமாக மாற்ற வேண்டும், கூடுதலாக உதவி நூலகர் நியமனம் செய்யப்பட வேண்டும்,
அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கூடுதல் புத்தகங்கள் தேவை என பொதுமக்கள், பொதுநல ஆர்வலர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் உறுதி கூறினார்.