காந்திகிராம் பலகலையில் மார்ச் 9ஆம் தேதி பட்டமளிப்பு விழா

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மார்ச் 9-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில் நேரில் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-02-05 12:52 GMT

காந்திகிராம பல்கலைக் கழகம்

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மார்ச் 9-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில் நேரில் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் வருகிற 15 ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

காந்திகிராம கிராமிய நிகழ்நிலை பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழா மார்ச் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. 2020-21, 2021-22, 2022-23 ஆகிய கல்வி ஆண்டுகளில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் நேரில் பட்டம் பெற விரும்பினால் பல்கலைக்கழக இணையதளத்தில் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News