கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜி. ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அவர் பேசுகையில், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பல்வேறு வகையான வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் தொழில் முனைவோர் ஆகலாம் அல்லது உயர்கல்வி பயில முயற்சி எடுக்கலாம். இல்லாவிடில் நல்லதொரு பணியில் சேர்ந்து கடினமாக உழைக்கலாம் என்று கூறினார்.
மேலும் மாணவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே அவர்கள் நினைத்த உயர்வை அடைய முடியும் என்பதை சில உதாரணங்களுடன் எடுத்து விளக்கினார். விழாவில் முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் டி. பாலமுருகன் வரவேற்புரை ஆற்றி, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள கூறினார். பட்டமளிப்பு விழாவில் முதுநிலை பொறியியல் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ் மற்றும் விஎல்எஸ்ஐ டிசைன் ஆகிய துறைகளிலும், இளநிலை பொறியியல் பிரிவில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளிலும் மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவில் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரிய பெருமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.