பேட்டை மதரஸாவில் பட்டமளிப்பு விழா
நெல்லை மாநகரம் பேட்டையில் உள்ள ஹிப்ழு மக்தப் மதரஸாவில் பட்டமளிப்பு விழா நடந்தது.;
Update: 2023-12-28 08:09 GMT
பட்டமளிப்பு விழா
நெல்லை மாநகர பேட்டை ஹிப்ழு மக்தப் மதரஸாவின் ஹாபிழா பட்டமளிப்பு விழா, 5-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பேட்டை வி.பி. திருமண மஹாலில் வைத்து நேற்று நடைபெற்றது. இதில் அபூஹிரைரா குழும தலைவர் ஹாஜி அபுல் ஹசன் தலைமை தாங்கினார். மக்தப் மாணவி ஃபர்ஹானா கிராஅத் ஓதினார். அபூஹுரைரா செயலாளர் காதர் ஒலி வரவேற்புரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இறுதியாக மதரஸாவின் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டப்பட்டது.