ராமநாதபுரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா !
ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-23 12:23 GMT
பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. கல்லூரி நிறுவனர் வி.மனோகரன் தலைமை வகித்தார். மதுரை யாதவா கல்லூரி முதல்வர் (ஓய்வு) கண்ணன், மதுரை ஆயிர வைஸ்யர் கல்லூரி முதல்வர் சிவாஜி கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் 2019-22, ஆண்டில் பயின்று பல்வேறு பாடப் பிரிவுகளில் அழகப்பா பல்கலை அளவில் பயின்ற சிறப்பிடம் பிடித்த 8 மாணவியர் 2020-23 ஆண்டில் பயின்று பல்வேறு பாடப்பிரிவுகளில் பல்கலை அளவில் சிறப்பிடம் பிடித்த 7 மாணவியர் உள்பட 423 மாணவியருக்கு அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி பட்டம் வழங்கினார். துணை சேர்மன் பார்த்தசாரதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் முத்துக்குமார், தேவகி, பத்மாவதி, செயலர் சகுந்தலா, முதல்வர் காஞ்சனா உள்பட பலர் பங்கேற்றனர்.