எஸ்.ஆர்.எம் கலை,அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சமயபுரம் அருகே இருங்களூர்எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 588 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது;

Update: 2024-04-07 04:48 GMT

 பட்டமளிப்பு விழா

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. இவ்விழாவிற்கு இராமாபுரம் மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர், மருத்துவர் சிவக்குமார் தலைமை வகித்தார். வளாகத்தின் முதன்மை இயக்குநர்.முனைவர் சேதுராமன், இயக்குநர், முனைவர் மால்முருகன், இணை இயக்குநர், மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

கல்லூரியின் முதல்வர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் கிறிஸ்டோபர் வரவேற்றார். இதில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினார். அப்போது அவர், கல்வி என்பது வெறும் வருவாய் தேடும் வழிமுறை மட்டும் இல்லை என்றும், அது ஒரு சமுதாயத்தைச் செம்மைப்படுத்தும் மாபெரும் ஆயுதம் என்றும் வலியுறுத்திப் பேசினார்.

விழாவில், இளங்கலைப் பட்டப் படிப்பில் 7 துறைகளைச் சேர்ந்த 588 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் வணிக மேலாண்மைத் துறையைச் சார்ந்த ஸ்ருதி, பூமிகா, புருஷோத்தமன் ஆகிய 3 மாணவர்களும் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர். இவ்விழாவில், கல்லூரியின் துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News