காங்கேயத்தில் பள்ளியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
காங்கேயம் விவேகானந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-23 10:28 GMT
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள்
காங்கேயம் விவேகானந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. குழந்தைகள் பட்டமளிப்பு உடை அணிந்து சான்றிதனை பெற்றுக் கொண்டனர் அடிப்படை கல்வியின் அவசியத்தையும் பெற்றோர் ஆசிரியர் இணைந்து மழலைகளுக்கு எவ்வாறு கல்வியை புகுத்த வேண்டும் என்பதை விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தெரிந்து கொண்டனர்.
மேலும் விழாவில் பேமியமா எடுடெக் பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அஸ்வின் சங்கமஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தை வளர்ப்பு பற்றி உரையாற்றினார் விழாவில் பள்ளி நிர்வாக தலைவர் ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் பத்மநாதன், பள்ளி பொருளாளர் ராஜன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.