சிவகாசியில் பள்ளி மழலையருக்கு பட்டமளிப்பு விழா...
சிவகாசியில் பள்ளி மழலையருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-03-29 11:12 GMT
பட்டமளிப்பு விழா
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆர்.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பிரிவில் யு.கே.ஜி., மழலையருக்கு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.சிறப்பு விருந்தினராக பள்ளியின் தலைவர் ஆர்.சண்முகையா, பள்ளி இயக்குனர் தனலட்சுமி சண்முகையா மற்றும் தாளாளர் ஆர்.எஸ்.மகேந்திரன் மாணவர்களுக்கு பட்டம் அளித்தனர்.நிர்வாக உறுப்பினரான விஷ்ணு பிரியாமஹேந்திரன், பள்ளியின் முதல்வர் முத்துலட்சுமி, நிர்வாக அதிகாரி சந்திரராஜன் உடனிருந்தனர்.நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.