திருவாரூரில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருவாரூர் வண்டாம் பாளையம் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில் 152 பேர் பயன் பெற்றனர்.;
Update: 2024-01-03 01:50 GMT
இலவ்ச கண் சிகிச்சை முகாம்
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம், திருவாரூர் வண்டாம் பாளையம் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமிற்கு பள்ளியின் தாளாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சந்திராமுருகப்பன் தலைமை வகித்தார். திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் கலியபெருமாள், கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்பராஜ் முன்னிலை வகித்தார். இலவச கண் சிகிச்சை முகாமினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆசை மணி தொடங்கி வைத்தார். முகாமில் 152 பேர் பயன் பெற்றனர். 17 நபர்கள் கண் சிகிச்சைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.