கிராவல் மண் திருட்டு டிராக்டர் பறிமுதல் !
கிராவல் மண் திருட்டு - டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 05:22 GMT
சரளை மண் திருட்டு
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புக்கிரவாரி பெட்ரோல் பங்க் அருகே பதிவெண் இல்லாமல் வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கிராவல் மண் திருடி வந்தது தெரிந்தது. தொடர்ந்து, டிராக்டரை ஓட்டி வந்த வாணவரெட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், 38; என்பவரை கைது செய்து, டிராக்டர் மற்றும் டிப்பர், 1 யூனிட் கிராவல் மண் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.