எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்து சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.;

Update: 2024-05-28 13:29 GMT
எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு
  • whatsapp icon
சேலம் மாவட்டம், கருமந்துறை அருகே உள்ள கரியகோவில் ஊராட்சியில் உள்ள கரிய ராமர் கோவிலில் மலைவாழ் மக்களுடன் இணைந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் பல்வேறு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானம் மூலம் இன்று சென்னை புறப்பட்டு சென்றார். அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் சட்டமன்ற உறுப்பினர்கள் மணி, ராஜமுத்து, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்டோர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News