சென்னை: முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல் - மாநகராட்சி முடிவு
வெப்பத்தை தணிக்கும் வகையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
Update: 2024-05-07 01:38 GMT
வெயில் சுட்டெரிப்பதையடுத்து வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 பகுதிகளில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.