கரூர் வைஸ்யா வங்கியின் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் பசுமை கிராமத் திட்டப்பணிகள்

முத்துகாபட்டி ஊராட்சியில்,பசுமை ஆற்றல் (சோலார் )மூலம் குடிநீர் மோட்டார் இயங்கும் திட்டம், ஊராட்சியின் பொது இடத்தில் வேலி அமைத்து சொட்டுநீர் பாசனத்துடன் அடர்வனம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை கரூர் வைஸ்யா வங்கியின் துணைப் பொது மேலாளர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-07-03 04:28 GMT

நாமக்கல் இரத்தினசபாபதி சுற்றுச் சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முத்துகாபட்டி ஊராட்சியில், பசுமை ஆற்றல் மூலம் குடிநீர் மோட்டார் இயங்கும் திட்டம், ஊராட்சியின் பொது இடத்தில் வேலி அமைத்து சொட்டுநீர் பாசனத்துடன் அடர்வனம் (மியாவாக்கி) அமைக்கும் திட்டம் ஆகியவற்றை கரூர் வைஸ்யா வங்கியின் துணைப் பொது மேலாளர் N.வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த சூரிய சக்தி அமைப்பின் மதிப்பு 10 இலட்ச ரூபாய் ஆகும். தொடர்ந்து, ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நிலத்தடி நீர் தொட்டிக்கு, சூரிய சக்தி மூலம் நீர் கொண்டு செல்லுதல் மற்றும் 600 மரக் கன்றுகள் நடவு செய்து பசுமை அடர்வனம் அமைத்தல் ஆகிய பணிகளையும் பார்வையிட்டனர்.

இதேபோல, மோகனூர் வட்டம் நன்செய் இடையார் ஊராட்சியிலும், ஊராட்சி மன்ற தலைவர் N.S. செந்தில்குமார் தலைமையில், துணைத்தலைவர் சேகர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கந்தசாமிக்கண்டர் நடுநிலைப் பள்ளி செயலாளர் மாசிலாமணி, பள்ளி தலைமையாசிரியர் நந்தக்குமார் முன்னிலையில் பள்ளிக்கு குடிநீர் சுத்கரிப்பு அலகு, ஊராட்சியில் பசுமை கிராம வனம் மற்றும் பசுமை ஆற்றல் மூலம் குடிநீர் மோட்டார் இயக்கும் திட்டத்தினையும் கரூர் வைஸ்யா வங்கி தலைமையக சமூக பொறுப்பு திட்ட உதவி பொது மேலாளர் வைத்தியநாதன் தொடங்கி வைத்து பேசுகையில்... மத்திய அரசின் பசுமை சுற்றுச்சூழல் அதிகரிக்கும் விதமாக இந்த கிராம ஊராட்சியில் இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.கரூர் வைஸ்யா வங்கியின் சார்பில் தமிழகத்தில், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, மகளிர்- குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகபணிகளை செய்து வருகிறோம். சென்ற ஆண்டு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் முடிக்கப்பட்டன. இந்த ஆண்டு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சமூகப் பணிகளை செய்து வருகிறோம் என்றார்.

முத்துகாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அருள் இராஜேஷ் கூறும்போது, முத்துகாபட்டி, மேதரமாதேவி ஆகிய பகுதிகளில் உள்ள 1000-ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, சூரிய சக்தி மூலம் இயங்கும் அமைப்பைக் கொண்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து, குழாய்கள் வழியாக வீடுகள்தோறும் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த சூரிய சக்தி மூலம் இயங்கும் அமைப்பின் மூலம் நாள் ஒன்றுக்கு 9 kw மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை மின்சார கட்டணம் மீதம் ஆகிறது. மீதமாகும் இந்த நிதியை கொண்டு இந்தக் கிராம ஊராட்சிக்கான பல்வேறு திட்டப் பணிகளை செய்து கொள்ளவதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் இரத்தின சபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவன இயக்குநர் பசுமை. மா. தில்லை சிவக்குமார், கரூர் வைஸ்யா வங்கியின் சமூக பொறுப்பு திட்ட மேலாளர் வெங்கடேஷ், முத்துகாபட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வரதராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.மத்திய அரசின் திட்டமான சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News