அதிமுக அமைப்பு செயலாளர் வாழ்த்து தெரிவிப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-05-11 05:15 GMT

அதிமுக அமைப்பு செயலாளர்

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உயர்கல்வியிலும் வெற்றி பெற்று மென்மேலும் வாழ்வில் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News