காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை குறைத்தீர் முகாம் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-07 08:20 GMT

தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாமில் தர்மபுரி,பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், அதியமான் கோட்டை, தொப்பூர்,மதிகோண் பாளையம் காவல் நிலையங்களுக்கு பகுதிக்கு உட்பட்ட மொத்தம் 88 மனுக்கள் பெறப்பட்டது இதில் 88 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

மேலும் புதிதாக 43 மனுக்கள் பெறப்பட்டது. இந்த பொதுமக்கள் மனு மீது குறைத்திர்க்கும் முகாமினை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.

இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர்களான இளங்கோவன், பாலசுப்பிர மணியன் காவல் துணை கண்காணிப்பாளர் களான செல்வி சிந்து, சிவராமன், தேவராஜன் காவல் ஆய்வாளர்கள், சுப்பிரமணி,பால கிருஷ்ணன், அன்பழகன், மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News