பட்டுக்கோட்டையில் 23ஆம் தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை துணை ஆட்சியர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம்,
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் பிப்.22 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
இதேபோல், பட்டுக்கோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.22 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள்,
விவசாயிகள் அனைவரும் அவரவர்களுக்கான நேரத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துக்கூறி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.