மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் பிப்.29 க்கு மாற்றம்

தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.29 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-18 23:59 GMT
ஆட்சியர் தீபக் ஜேக்கப்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வருகின்ற பிப்.23 அன்று நடைபெற இருந்தது.  இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக பிப்.29 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள், தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்பிடம் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News