குறைதீர்க்கும் கூட்டம்: செல்போன் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளே வருவதும் கூட தெரியாமல் படம் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள்.;
செல்போன் பயன்படுத்திய அதிகாரிகள்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது . இங்கு தனிநபர் பிரச்சினை முதல் பொது பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் வாரம் தோறும் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளே வருவதும் கூட தெரியாமல் மாற்றுத்திறனாளி பிரிவு அலுவலர் தனது செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். பல துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுதும் கூட அதை கவனிக்காமல் தங்களது செல்போனையே பார்த்துக் கொண்டு கவனத்தை முழுவதும் கைப்பேசியில் மட்டுமே வைத்துக் கொண்டு இருந்தது.
பொதுமக்கள் மத்தியில் பெரும் முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாரம் ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வராததால் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கக்கூடிய அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் தங்களது மெத்தன போக்கை கைவிட்டு தாங்கள் வாங்கும் சம்பளம் பொது மக்களின் வரிப்பணம் என்பதை உணர்ந்தால் மட்டுமே, இது போன்ற இன்னல்களில் இருந்து காக்க முடியும். ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எதிர்வரும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வரும் அதிகாரிகளை கண்காணித்து அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.