குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-02-19 14:44 GMT
மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் இன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  (19.02.2024) நடைபெற்றது.   மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர்  தலைமை வகித்தார்.  கூட்டத்தில்,  290 கோரிக்கை  மனுக்கள்  இன்று  பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை  மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.      

 தொடர்ந்து   தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஜவஹர்லால் நேரு  பிறந்தநாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலைகளும், மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் ஒரு தமிழறிஞருக்கு ரூ.10000/-க்கான காசோலை வழங்கி சிறப்பித்தார்.       

மேலும் 2021 ஆம் ஆண்டில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான நாகர்கோவில் மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலகத்திற்கான கேடயத்தினை மாவட்டத் தீயணைப்புத்துறை அலுவலர் சத்யகுமார் என்பவருக்கு வழங்கப்பட்டது.         இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம்,  உட்பட  அனைத்துதுறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News