நிலக்கடலை சாகுபடி விவசாயிகள் பயிற்சி முகாம்
அட்மா திட்டத்தின் கீழ் குழந்தை விநாயகர்கோட்டை கிராமத்தில் நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
Update: 2024-01-28 11:51 GMT
புதுக்கோட்டை: திருவரங்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைவிநாயகர்கோட்டை கிராமத்தில் நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஆதி சாமி, வேளாண் உதவி இயக்குனர் வெற்றிவேல், வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேரா சிரியர் பாலமுரளி, உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன், கவியரசி ஆகியோர் கலந்து கொண்டு நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். திவ்யநாதன் நன்றி கூறினார்