குரூப் - 4 தேர்வு: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

பெரம்பலூரில் குரூப் - 4 தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-25 12:16 GMT

பெரம்பலூரில் குரூப் - 4 தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி - 4 தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் நடைபெற்றது .......... தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி -IV தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் , தலைமையில் மே 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்த போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி - 4 தேர்வு ஜூன் - 9ம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தேர்வு பெரம்பலூர் வட்டத்தில் 41 மையங்களும், ஆலத்தூர் வட்டத்தில் 4 மையங்களும், குன்னம் வட்டத்தில் 8 மையங்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 8 மையங்களும் என மொத்தம் மாவட்டத்தில் 61 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 18,169 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க 6 பறக்கும் படைகளும், 30 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 61 தேர்வு மையங்களிலும் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணிக்கு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும்.

தேர்விற்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மாவட்ட கருவூலத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். . தேர்வு நாளன்று அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வர்கள் எளிதில் சென்று சேரும் வகையில் போதிய பேருந்து வசதிகள் இருக்கும் வகையில் ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு செய்திட வேண்டும். தேர்விற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை முறையாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி - 4 தேர்வினை சிறப்பாக நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தரராமன், துணை காவல்கண்காணிப்பாளர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்வு மையங்கள் அமைந்துள்ளன பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News