விபத்தில் காவலர் காயம் - எஸ்பி நேரில் நலம் விசாரிப்பு
குடவாசலில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த காவலரை எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று நலம் விசாரித்தார்.;
Update: 2023-12-27 09:14 GMT
எஸ்பி நலம் விசாரிப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்க்கோட்டம் குடவாசல் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சிவானந்தம் என்பவர் இரவு ரோந்து பணி நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தவர் அதிகாலை 4.30 மணி அளவில் சிமிழி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . ரோந்து காவலர்கள் விபத்தில் காயம் அடைந்த காவலரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த எஸ்பி ஜெயக்குமார் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த காவலரை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.