காவலர்கள் சங்க கூட்டம்
ஓட்சா கூட்டமைப்பு இணைந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது
காவேரிப்பட்டிணத்தில் ஓட்சா கூட்டமைப்பு இணைந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ஓட்சா கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்க கூட்டம் மாநிலத் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றிய தலைவர் குரு மணி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் முருகம்மாள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், வேலைக்கான சீருடைகள் கையுறை, மாஸ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும்,
சுகாதார ஊக்குனர்களுக்கு மாதந்திர மதிப்பூதியம் வழங்க வேண்டும், பன்னி ஹள்ளி ஊராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை காவலருக்கு உடனே பணி வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் பிரதாப் நன்றி கூறினார்.