நெல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தீபக் ராஜன் இறுதி ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2024-05-27 06:20 GMT
நெல்லையில் கடந்த 20ஆம் தேதி கூலிப்படையினரால் தீபக் ராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை இன்று உறவினர்கள் வாங்க சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து நீதிமன்றம் அருகே உள்ள பிணைவரையிலிருந்து அவரது சொந்த ஊரான வாகைகுளம் வரை ஊர்வலம் நடைபெற உள்ளது.இந்த ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லையில் பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இன்று (மே 27) காலை முதல் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.