ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-02 02:10 GMT

குருபகவானுக்கு சிறப்பு பூஜை 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற குரு பரிகார ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளது . இந்த ஆலயத்தில் தென்முக கடவுளாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தியே குரு பகவானாக தனி சன்னதியில் அமையப்பெற்று அருள் பாலித்து வருகிறார். இதனை தொடர்ந்து நேற்று குருபகவான் மாலை 5.19 மணியளவில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குருபெயர்ச்சி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News