ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-02 04:08 GMT

குருபகவான் 

ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா விமர்சையாக நேற்று நடந்தது. நவக்கிரகங்களின் அதிபதியான குருபகவான் மேஷ ராசியில் இருந்து நேற்று மாலை 5.19 மணியளவில் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி கோவிலில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு, பரிகார அர்ச்சனைகள் செய்யப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர், விளக்கு தீபமேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். குருக்கள் நாகராஜ், சோமு பூஜைகளை செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீகந்தவிலாஸ் ஜெயக்குமார் செய்திருந்தார்.
Tags:    

Similar News