கரூரில் சாக்கிய நாயனாருக்கு குருபூஜை விழா .
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 64 நாயன்மார்களில் ஒருவரான சாக்கிய நாயனாருக்கு குருபூஜை விழா நடந்தது.;
Update: 2024-01-11 12:55 GMT
குருபூஜை
கரூரில் பிரசித்தி பெற்றது கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயமாகும். இந்த ஆலயத்தில் 64- நாயன்மார்களுக்கும் குருபூஜை விழா குறிப்பிட்ட நாட்களில் நடப்பது வழக்கம். இறைவனை வழிபட விரும்பினால் மந்திரங்கள், பக்திப் பாடல்கள் கொண்டும், பூக்களைக் கொண்டும் வழிபடுவது வழக்கம். ஆனால், ஒருவர் இறைவன் மீது கல்லெறிந்து வழிபட்டார். அவர்தான் சாக்கிய நாயனார் . கல்லால் அடித்தவருக்கு கயிலாய பதவியையும் கொடுத்து, 63 நாயன்மார்களில்ஒருவருவராகவும் உயர்த்தினார் ஈசன். இத்தகைய சிறப்புடைய சாக்கிய நாயனாருக்கு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சிவனடியார்கள் இசைக்கருவிகளை இசைத்து, பக்தி பாடல்களை பாடியவாறு பசுபதீஸ்வரர் கோவிலை வலம் வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் சாக்கிய நாயனாரை வணங்கினர்.