குட்கா பதுக்கி விற்பனை - ராஜஸ்தான் மாநிலத்தவர் கைது

Update: 2023-12-15 07:00 GMT
குட்கா பறிமுதல் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்,குட்கா, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து திருப்பூர் மாநகர காவல் துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர். பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையிலான காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்டதில் அங்கு ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ் புகையிலை குட்கா போன்ற பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து ஹான்ஸ் குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஜோதா ராம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 155 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் குட்கா புகையிலை போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News