டீக்கடையில் குட்கா விற்பனை - 3 பேர் கைது
கரூர் சின்னாண்டாங்கோவில் பகுதியில் டீக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 16ஆம் தேதி மதியம் 2 மணி அளவில்,கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து சின்ன ஆண்டாங் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும், சின்னான்டாங் கோவில், பெரியசாமி நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மனைவி சுசீலா வயது 66 என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது.
அந்தக் கடையில் சோதனை மேற்கொண்ட ரமேஷ், விற்பனைக்கு வைத்திருந்த ஹான்ஸ் 19 பவுச் களையும், கூல் லிப் 9- பவுச்சுகளையும், விமல் பாக்கு 30 பவுச் களையும், வி1 பாக்கு 27 பவுச்சுகளையும், ஆர் எம் டி பாக்கு 60 பவுச்சுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்களின் மதிப்பு ரூபாய் சுமார் 13,000 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், சட்டவிரோத புகையிலை விற்பனையில் ஈடுபட்ட சுசீலா, அவருக்கு உதவிய சாமிநாதன், பாலசுப்பிரமணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர். கைது செய்யப்பட்ட சுசிலா மீது ஏற்கனவே கரூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.