சூளகிரி பகுதியில் வாகனத்தணிக்கையில் குட்கா பறிமுதல்
சூளகிரி பகுதியில் வாகனத்தணிக்கையில் 15 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-23 10:36 GMT
சூளகிரி பகுதியில் வாகனத்தணிக்கையில் 15 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை TPS அவர்கள் உத்திரவின் பேரில் பெங்களூரில் இருந்து ஓசூர் நெடுஞ்சாலை வழியாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி செல்வதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவிட்டதின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒசூர் அவர்களின் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் to கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் A2B ஓட்டல் அருகே காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் சையத்பாஷா, சிறப்பு காவலர் 1035, ரவிக்குமார் முதல் நிலைக் காவலர்கள் 1675.சீனிவாசன். 1306. ராஜீ ஆகியோர்களுடன் வாகன தணிக்கையில் இருக்கும் போது TN-72 BW- 9432 Eicher container லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ பகுதியில் காவலர்களின் வாகன சோதனையை கண்டவுடன் தனது வாகனத்தை சம்பவயிடத்தில் விட்டு விட்டு இறங்கி தப்பி ஓடுவதை பார்த்து வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தில் இரும்பு தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி தனியறை அமைத்து மறைத்து வைத்திருந்த சுமார் 150 மூட்டைகளில் சுமார் 575,400 கிலோ கிராம் எடையுள்ள சுமார் 15 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகியவற்றை ஆய்வின் அடிப்படையில் கைப்பற்றி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் குட்கா பொருட்களுடன் சூளகிரி காவல் நிலையம் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.