திருப்பூர் அருகே விபத்தில் சிக்கிய கார்களில் குட்கா பறிமுதல்

திருப்பூர் அருகே விபத்தில் சிக்கிய கார்களில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், டிரைவர்கள் தப்பி ஓடியதால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2024-05-24 10:51 GMT

குட்காவை பறிமுதல் செய்த போலீசார்

திருப்பூர் அருகே விபத்தில் சிக்கிய கார்களில் குட்கா பறிமுதல்! டிரைவர்கள் தப்பி ஓட்டம். திருப்பூர் விபத்தில் சிக்கிய கார்களில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

டிரைவர்கள் தப்பி ஓடியதால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பெருமாநல்லூர் அருகே வளசப்பாளையம் என்ற இடத்தில் இன்று அதிகாலை கர்நாடகா பதிவு கொண்ட ஒரு காரின் டயர் வெடித்து டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் அந்த காருக்கு பின்னாடி வந்து கொண்டிருந்த அரசு பஸ் அந்த காரின் மீது மோதியது. மேலும், பஸ்சுக்கு பின்னால் வந்த கொண்டிருந்த மற்றொரு டெல்லி பதிவு எண் கொண்ட காரும் பஸ் மேல் மோதியது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த  கார்களில் பயணம் செய்த நபர்களும் தப்பி ஓடி விட்டனர். விபத்துக்குள்ளான காரை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்துக்குள்ளான 2 கார்களிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக அடிக்க வைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கார்களில் இருந்து குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News