54 கிலோ குட்கா பறிமுதல் - உணவு பாதுகாப்புத் துறை அதிரடி
மண்ணச்சநல்லூர், கல்லக்குடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட 54 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூர், கல்லக்குடி காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு மண்ணச்சநல்லூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்த ஆனந்தபிரகாஷ் என்பவரின் இரு சக்கர வாகனம் மற்றும் வீடுகளில் சுமார் 40 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது.
மேலும், அவரிடம் இருந்து மாந்துரை பகுதியை சார்ந்த குரலரசன் என்ற நபர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி செல்ல முற்பட்டபோது அவரிடம் இருந்த பொருட்களும் மற்றும் அவரின் வாகனமும் கைப்பற்றபட்டு மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் காவல் நிலையத்தில் இரண்டு நபரையும் அவர்களது வாகனமும் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல் கல்லக்குடியில் அக்பர் அலி என்பவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு மேல் நடவடிக்கைக்காக அக்பர் அலியை கல்லக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது் இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புச்செல்வன், செல்வராஜ், இப்ராஹிம், கந்தவேல் ஆகியோர் உடனிருந்தனார்.