குட்கா விற்றவர் கைது

திருக்கோவிலுார் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-16 04:51 GMT

குட்கா விற்றவர் கைது

 திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் நேற்று காலை பாடியந்தல் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான ஒரு பெட்டிக்கடையை சோதனை செய்தபோது, குட்கா விற்றது தெரியவந்தது. உடன், 7000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளரான ராஜரத்தினம், 46; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
Tags:    

Similar News