ரயிலில் பார்சல் மூலம் குட்கா கடத்தல் - ஒருவர் கைது
மைசூர் முதல் தூத்துக்குடி வரை செல்லும் விரைவு ரயிலில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் மதுரை ரயில்வே குற்ற கண்காணிப்பு குழு எஸ்.ஐ தில்லை நடராஜன் தலைமையில் ரயிலில் கண்காணித்து வந்தனர். அப்போது இன்று காலை விருதுநகரில் 8:30 மணி அளவில் 5 பார்சல்களில் ஜவுளி பொருட்கள் என 195 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இதை அடுத்து ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ரஜினி , எஸ்.ஐ., மலையாண்டி தலைமையில் போலீசார் பார்சலை எடுக்க வந்த திருச்சுழி, கேத்தநாயகன் பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (36) என்பவரிடம் விசாரித்தனர். பின்னர் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் பிரியா, எஸ்.ஐ., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரித்ததில் 5 பார்சல்களில் 195 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்து விருதுநகர் ரயில்வே நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்