புற்று நோயாளிகளுக்கு கூந்தல் தானம்

ஆலங்குளத்தில் கல்லூரி மாணவிகள் புற்று நோயாளிகளுக்கு கூந்தல் தானம் செய்தனர்.

Update: 2024-05-04 13:54 GMT

ஆலங்குளத்தில் கல்லூரி மாணவிகள் புற்று நோயாளிகளுக்கு கூந்தல் தானம் செய்தனர்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்தில் செவிலியா் கல்லூரி மாணவிகள் 103 போ், புற்று நோயாளிகளுக்கு தங்கள் கூந்தலை தானம் செய்தனா். நவீன செவிலியா் இயக்கத்தை தோற்றுவித்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே ஆண்டுதோறும் உலக செவிலியா் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருநெல்வேலி இந்திய பயிற்சி பெற்ற செவிலியா் சங்க தமிழ்நாடு கிளையின் சாா்பாக கூந்தல் தானம் செய்யும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்து தனியாா் செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்களில் அமைந்த செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த 103 மாணவிகள், தங்கள் கூந்தலை புற்று நோயாளிகளுக்காக தானம் செய்தனா். மாணவிகளை, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா, செவிலியா் சங்க நிா்வாகி மாா்கிரெட் ரஞ்சிதம், கல்லூரி முதல்வா் ஏஞ்சல் ராணி உள்ளிட்டோா் பாராட்டினா்.
Tags:    

Similar News