ரெயில்வே ஊழியர்கள் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்

ஐ.சி.எப் மற்றும் தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் அப்ரண்டீஸ் ஊழியர்கள் பணி மூப்பு அடிப்படையில் தங்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படாமல் வட மாநிலத்தவருக்கு பணி வழங்கப்படுவதாக கூறி தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-16 02:18 GMT

சத்ய பிரதா சாகு

தேர்தலை புறக்கணிக்கும் விதமாக கோயம்பேட்டில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் சிஎப் அப்ரண்டீஸ் ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வில்லிவாக்கம் அருகே அமைந்துள்ள ஐ.சி.எப் மற்றும் தெற்கு ரயில்வேயில் (சென்ட்ரல் இரயில் நிலையம்) பணிபுரியும் அப்ரண்டீஸ் ஊழியர்கள் பணி மூப்பு அடிப்படையில் தங்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படாமல் வட மாநில வாலிபர்களுக்கு பணி வழங்கப்படுவதாக கூறி ரயில்வே துறையில் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.

தற்போது கோயம்பேட்டில் அமைந்துள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிப்பதற்கும், தேர்தலை புறக்கணிக்கும் விதமாக தங்களது வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்கவும் கோயம்பேடு பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து மனுவைப் பெறாமலும் அவர்களது கோரிக்கையை கேட்காமலும் அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை பேருந்தில் ஏற்றி சென்று அருகே உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags:    

Similar News