அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீமத் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அலங்காரம், வழிபாடு நடந்தது.
Update: 2024-01-11 06:23 GMT
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தேனி அல்லிநகரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீமத் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 62 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக ஆலய வளாகத்தில் வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன அதனைத் தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலை சாற்றி பலவித நறுமண மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். அதேபோல் கையில் கடாயுதம் ஏந்தியவாறு அமர்ந்திருக்கும் உற்சவர் அனுமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயரை திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர் பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது