வரதட்சணை கேட்டு தொந்தரவு - கணவன் குடும்பத்தினர் 4பேர்மீது வழக்கு

மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரம் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட குடும்பத்தில் வரதட்சணை கேட்டு தொந்தரவு நீதிமன்ற உத்தரவின்படி நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.

Update: 2024-04-13 15:20 GMT

காவல்துறை விசாரணை


மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரம் பகுதியை சேர்ந்த சிற்றரசு மகன் பிரவீன் குமாரும் மயிலாடுதுறை செம்மங்குளம் கீழக்கரையை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணும் கடந்த 2020இல் திருமண செய்து கொண்டனர். இந்நிலையில் திவ்யாவை வீட்டு வேலை செய்ய சொல்லி வற்புறுத்தியும் நகை பணம் கார் எனத் தொடர்ந்து வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியாக கூறப்படுகிறது . இது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரன்படி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திவ்யாவின் கணவர் பிரவீன் குமார், மாமனார் சிற்றரசன், மாமியார் ராஜேஸ்வரி, கணவரின் சகோதரி புவனேஸ்வரி ஆகிய நான்கு பேர் மீதும் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News