ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் தஞ்சை வீராங்கனைக்கு பாராட்டு
ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் தஞ்சை வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-06 09:01 GMT
மாணவிக்கு பாராட்டு
உலக சாம்பியன்ஷிப் - 2024. இத்தாலி நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த பாஸ்கரன், இராணி தம்பதியினரின் மகளான பூர்ணிஷா (19) இந்திய அணி சார்பில் சீனியர் பெண்கள் பிரிவில் விளையாடத் தேர்வாகியுள்ளார்.
தமிழக அளவில் இவர் மட்டுமே தேர்வானது குறிப்பிடத்தக்கதாகும்.அவரை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் .க.அன்பழகன் அவர்கள் ஆசி வழங்கி வாழ்த்தினார்.