சுகாதார பணியாளர் தற்கொலை
சேலத்தில் சுகாதார பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 41). சுகாதாரத்துறையில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபிரகாஷ் இறந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஜெயபிரகாசுக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் இழந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். ஜெயபிரகாசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்று கூறினர்.