சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்கள்

சாலை விரிவாக்கத்திற்கு தோண்டப்பட்ட மண்குவியல் அகற்றப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

Update: 2024-05-25 14:06 GMT

சாலை விரிவாக்கத்திற்கு தோண்டப்பட்ட மண்குவியல் அகற்றப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.


சித்தாமூர் அருகே முதுகரை முதல் கூவத்துார் வரையிலான 25 கி.மீ., தார் சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலகண்டை முதல் கீழகண்டை கிராமங்களுக்கு இடையிலான 2 கி.மீ., சாலை குறுகலாக இருந்ததால், சாலையை விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறை சார்பாக டெண்டர் விடப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணி துவங்கப்பட்டது. ஏற்கனவே, 7 மீட்டர் அகலம் உடைய சாலை இருந்தது. இரண்டு புறங்களிலும் தலா 1.5 மீட்டர் விரிவாக்கம் செய்து, மொத்தம் 10 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன் பணிகள் நிறைவடைந்தன.

சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டிய போது எடுக்கப்பட்ட மண், அகற்றப்படாமல் சாலை ஓரத்தில் குவியல், குவியலாக கொட்டப்பட்டு உள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், சாலையை கடந்து ஏரிக்கு சென்றடையும். தற்போது, சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் குவியலால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற வழியின்றி, குடியிருப்பு பகுதியில் தேங்கும் அபாய நிலை உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News