அரசு அரசு மருத்துவமனையில் வெப்ப அழுத்த நோய் சிகிச்சை ஏசி தனிவார்டு
தென்காசி அரசு மருத்துவமனையில் வெப்ப அழுத்த நோய் சிகிச்சை ஏசி தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தினால் தீவிர வெப்ப நிகழ்வுகள் வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக் ) போன்ற பல்வேறு வெப்ப அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. ஹீட் ஸ்ட்ரோக் என்பது வெப்பம் தொடர்பான மிகவும் தீவிரமான கோளாறு உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது இது நிகழ்கிறது. உடல் வெப்பநிலை வேகமாக உயர்கிறது, வியர்வை பொறிமுறை தோல்வியடை கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பலர் நாள்தோறும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது போன்ற அதிக வெப்ப நிலையால் கோடைகாலங்க ளில் வரும் நோய்களை கண்டறிந்து அதனை சரி செய்வதற்கு அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் வழிகாட்டுதலின்படி, இணை இயக்குனர் பிரேமலதா ஆலோசனையின் படியும், மருத்துவமனை கண்காணிப் பாளர் டாக்டர் இரா. ஜெஸ்லின் தீவீர முயற்சியாலும் குளிர் சாதன வசதிகளுடன் கூடிய 16 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெப்பத் தாக்கத்தினால் உண்டாகும் பாதிப்புகளுக்கு தேவையான அவசரகால முதலுதவி மருந்துகள் தயார் நிலையில் உள்ளது.