திம்பம் மலைப்பாதையில் கடும் மேகமூட்டம்
திம்பம் மலைப்பாதையில் கடும் மேகமூட்டம் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்ற வாகன ஓட்டிகள்.
சத்தியமங்கலம் அடுத்த அடுத்த தாளவாடி ஆசனூர் திம்பம் மற்றும் வனப்பகுதி கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவியது.
இந்த நிலையில் நேற்று மாலை திம்பம் மலைப்பாதையில் திடீரென மேகமூட்டம் காணப்பட்டது மேகமூட்டம் படர்ந்து பரவியதால் வெள்ளைக்கம்பளம் விரித்தது போன்று திம்பம் மலைக் காட்சி அளித்தது இதனால் திம்பம் மலைப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது.
மேலும் சாரல் மலையும் பெய்தது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மேகமூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர் திடீரென்று ஏற்பட்ட மேகமூட்ட்த்தை கண்டதும் திம்பம் மலைப் பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ரசித்தபடி சென்றனர்