மழை வெள்ளத்தில் மார்க்கெட் மூழ்கியதால் பலத்த நஷ்டம்

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் மார்க்கெட் மூழ்கிய நிலையில் காய்கறிகள் வீணாகியுள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2023-12-20 02:35 GMT

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் மார்க்கெட் மூழ்கிய நிலையில் காய்கறிகள் வீணாகியுள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மலை வெள்ளம் சூழ்ந்துள்ளது குறிப்பாக தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பகுதியில் மழை நீர் இடுப்பளவு சூழ்ந்துள்ளதால் காய்கறி மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த தக்காளி கேரட் உள்ளி பல்லாரி கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது மேலும் மிஞ்சிய காய்கறிகளை தண்ணீருக்குள் சென்று வியாபாரிகள் எடுத்து வந்து வெளியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீரில் இருந்து மீண்டு வந்து அத்தியாவசியமான பொருட்களான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர் வியாபாரிகள் பல லட்சம் மதிப்பிலான காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
Tags:    

Similar News