குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் மீண்டும்  கனமழை

குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் மீண்டும்  கனமழை பெய்தது.

Update: 2023-12-02 10:47 GMT
குமரி மழையால் சாலையில் வெள்ளம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக  குமரி மாவட்டத்திலும் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

கொட்டாரம், மயிலாடி பகுதியில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது. கனமழையால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 55.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.         

இன்று மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.



Tags:    

Similar News